அறத்தின் ஒளி மறையாதது…
அமைதியின் வழி விலகாதது…
அந்த ஒளியையும், அந்த வழியையும் நமக்குக் காட்டியவர் — தமிழ்த் தெய், பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர்.
“அறம் செய விரும்பு…” என்று சொன்ன அந்தச் சொல்,
இன்றும் மனித வாழ்வின் நெறிக் குரல்.
இயற்கையோடு இணைந்து வாo;வும்,
நீதி, சமாதானம், நல்லிணக்கம் காக்கவும்
அவரின் திருக்குறள் வழிகாட்டியாக நின்றுகொண்டிருக்கிறது.
நீதி நீரெனப் பாயட்டும் மனங்களில்,
நல்லிணக்க மலர் மலரட்டும் உயிர்களில்,
அமைதி வானம் விரிந்திடட்டும் உலகம் முழுதும்,
வள்ளுவன் வாக்கு வழி காட்டட்டும் காலம் முழுதும்.
இன்று, அந்த வள்ளுவ நெறிகளை அடிப்படையாகக் கொண்டு,
அமல மரி தியாகிகள் சபையின் யாழ் மாகாணத்திd; சிபிஆர் என்று அழைக்கப்படுகின்ற நீதி சமாதான நல்லிணக்க பணியகம்,
தனது வலையொளி ஊடகச் செயற்பாடாக
இந்தத் திருக்குறள் காணொளித் தொடரை வழங்குகிறது.
இது ஒரு கல்வி நிகழ்ச்சி மட்டுமல்ல,
ஒரு வாழ்வியல் விழிப்பு!
இது…… நம் மனங்களில் நீதி விதைக்கும்,
நல்லிணக்கம் மலரச் செய்யும்,
இயற்கை நேசத்தைப் புதுப்பிக்கும்
அற நெருப்பு.
அறமே அடிமூலம், அமைதியே கிளை,
நல்லிணக்கம் மலர், மனிதம் அதன் கனியே.
இந்த மரம் வளரட்டும் — உலகம் முழுதும் நிழலளிக்கட்டும்.
திருவள்ளுவர் சொன்னபடி —
“சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறமானது செல்வமும் உயர்வும் தரும் ஆதலின் அறத்தைக் காட்டிலும் வாழ்விற்கு நன்மை தருவது வேறில்லை.”
அறம் நிறைந்த வாழ்வு தான் உண்மையான மனித வாழ்வு.
அதை நமக்கு நினைவூட்டும் ஒளியாக,
இந்தத் தொடர் விளங்கட்டும்.
வாரம் ஒரு குரள் படிப்போம் வாழ்வின் வாகை சூடுவோம் எனும் நோக்கோடு
வாழ்வுக்கு வாரம் ஒரு குரள் பா
எனும் தலைப்போடு
வாரந்தோறும் ஒரு பொய்யாமொழி குரல் உங்கள் சமூக ஊடகவாசலை தட்டும் அதைத் திறந்து கொள்ளுங்கள் கேட்டு வாழ்வில் செழிமையை பெற்றுக் கொள்ளுங்கள்
நன்றி.
நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் வாழ்த்துகளுடன் — இயக்குனர் அருட்பணி எஸ் ஜே ஜீவரட்ணம் அமதி
திருக்குறள் வழி தொடரட்டும்… 🌿

Post a Comment