இயற்கையின் உறவுகள் விலங்குகள் - உலக விலங்குகள் தினம் இன்று! CPR -OMI (JPIC)

 

உலகம் முழுவதும் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக விலங்குகள் தினம் (World Animal Day) அனுசரிக்கப்படுகிறது. இயற்கையின் முக்கியமான பகுதியான விலங்குகள், இந்த தினத்தின் மூலம் முக்கியத்துவம் பெறுகின்றன. மனிதனுடன் வாழும் ஆட்கள், செல்லப்பிராணிகள் மட்டுமல்லாமல் காட்டுவிலங்குகளும், கடல் ஜீவராசிகளும், பறவைகளும் இந்த நாளில் நினைவுகூரப்படுகின்றன.



விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலனை பாதுகாப்பது, ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது,மனிதர்களும் விலங்குகளும் ஒற்றுமையாக இயற்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது,விலங்குகளுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்க ஒரு உலகளாவிய நாளாக  மாற்றுவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.


விலங்குகள் இல்லாமல் இயற்கை சுழற்சி சீர்கெடும்

*தேனீக்கள் பரிணாம வளர்ச்சிக்குத் தேவையான மகரந்த பரப்பலை செய்கின்றன.

*  யானைகள், காடுகளின் பரப்பலுக்கு உதவுகின்றன.

*  பறவைகள் விதைகள் பரப்பவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

* கடல் விலங்குகள், கடல் சூழலின் சீரினை நிலைநாட்டுகின்றன.

 இயற்கை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் ஒரு அழகான அமைப்பாகும். மனிதனும் அதன் ஒரு பகுதி மட்டுமே. ஆகவே, விலங்குகளை மதித்து, பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். இயற்கையை நாம் மதிக்கும்போது தான் அது நம்மை பாதுகாக்கும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post