பூமி நம் வீடு. நேசிப்போம், பாதுகாப்போம்!


உலக பூமி நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய நாளாகும். பூமி நம் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பதால் , அதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.


1970ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் மரம் நடுதல், பசுமை பராமரிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு, கழிவுகள் குறைப்பு போன்ற பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் இணைந்து பல பிரச்சாரங்களை நடத்துகிறார்கள்.


பூமி நாளை கொண்டாடுவது மட்டும் போதாது. நாம் தினமும் இயற்கையை பாதுகாக்கும் பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இது நம் எதிர்கால சந்ததிகளுக்கு சுத்தமான மற்றும் பசுமைமிக்க உலகை தரும்.





பூமி நம் வீடு. அதை நேசிக்கவும், பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எமது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் செயற்பாடுகளில்  'சூழல் பாதுகாப்பு'  பிரதானமான  ஒன்றாகும். எமது பணியகத்தின் ஊடாக எமது இலக்கு கிராமங்களில் சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக பலவகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளோம். அதேபோன்று பூமியின் பசுமையை பேண இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மரநடுகை திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் எதிர்வரும் நாட்களில்  முல்லைத்தீவு,   மன்னார் , யாழ்ப்பாண மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட இளைஞர்களை உள்ளடக்கி  சுற்றுச்சூழல் துப்பரவு பணிகளும் மரநடுகை செயல் திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 ஜெ.றொகான்

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம். 

 மாவட்ட இணைப்பாளர், மன்னார்.


#உலக பூமி நாள் #environment

#சமாதானத்திற்கும்நல்லிணக்கத்திற்குமானபணியகம் #cpr #jpic 

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post