அருட்தந்தை லூக்கால் றெஜினி யூட் அவலின் அமதி விபத்தில் மரணம் CPR -OMI (JPIC)

 யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபைக்குருவும், மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அவலின் அடிகளார் 21.09.2025 நேற்று வீதிவிபத்தொன்றில் காலமாகிவிட்டார்.



அருட்தந்தை அவலின் அடிகளார், யாழ்ப்பாணம் இளவாலையில் 12.12.1980ம் ஆண்டு பிறந்தார். யாழ் இளவாலை றோ.க.த.க பாடசாலை, புனித கென்றி அரசர் கல்லூரி, கிளிநொச்சி பற்றிமா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான அருட்தந்தை அமலமரித்தியாகிகள் சபையில் இணைந்து 2006ம் ஆண்டில் தனது முதலாவது நித்திய அர்ப்பணத்தை மேற்கொண்டார்.

 கண்டி அம்பிட்டிய குருமடம் மற்றும் யாழ் சவேரியார் குருத்துவ கல்லூரியில் தனது குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்த தந்தை 28.05.2015இல் யாழ் ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆண்டகையால் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருவாக திருதிலைப்படுத்தப்பட்டார். 


கொக்கிளாய் அமதிக்களம், ஸ்கந்தபுரம் அமதிவனம், இயக்கச்சி நேசக்கரங்கள், வ்வுனியா அமதியகம் ஆகியவற்றில் மக்களுக்கான ஆன்மீக சமூகப்பணிபுரிந்த அருட்தந்தை இறுதியாக இலுப்பக்கடவையில் புனித அந்தோனியார்புர பங்கின் முதலாவது அமலமரித்தியாகியாக  அரும்பணியாற்றினார்.





இன மத பேதமற்று அனைத்துமக்களுக்கும் அரும்பணியான்றிய இவ் இளம்குருவானவரின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இவரின் பிரிவால் துயருற்றுள்ள அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுதலுக்காக மன்றாடுவோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post