சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் இளைஞர்களுக்கான மாதாந்த பொது நிகழ்வு கடந்த வாரம் முல்லைத்தீவு கொக்கிளாயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மன்னார் மாவட்ட இளைஞர்களையும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களையும் இணைத்து சிறப்புற நடைபெற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக அமல மரித் தியாகிகளின் "அமதிகளம்" மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு- கொக்கிளாய் பொலிஸ் பிரிவினர் வளவாளர்களாக கலந்து கொண்டு பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, வீதி விபத்தை தவிர்த்தல் என்பன தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்வின் மற்றுமொரு பகுதியாக இளைஞர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு செயலமர்வும் மகிழ்வூட்டல் செயற்பாடுகளும் கொக்கிளாய் - மடுத்தீவு பகுதியில் இடம்பெற்றது.
Post a Comment