சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியாகத்தினால் இளைஞர்களுக்கான மாவட்டங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு விசேட நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் இளைஞர்களும் கிளிநொச்சி மாவட்டம் மணியங்குளம் கிராம இளைஞர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியாக இரு மாவட்ட இளைஞர்களுக்கிடையில் நட்பு ரீதியான மென்பந்தாட்டப் போட்டியும் இளைஞர் யுவதிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சமாதானத்துக்கு நல்லிணக்கத்துக்குமான பணியாகத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அமதி அடிகளார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திருவாளர் சுகந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
Post a Comment