குழந்தைகளுடைய ஆரம்ப மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற முதலாவது களமாக குடும்பம் அமையப்பெறுகின்றது. தாயினுடைய கர்ப்ப காலத்தின் பொழுது நுகப்பருத்திலிருந்து ஆரம்பித்து குழந்தை பிறந்து வளர்ச்சியடைகின்ற ஒவ்வொரு கால கட்டத்திலும் பிள்ளைகளுக்கு பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் நிலவுவதுடன் அவற்றை நிவர்த்தி செய்யும் ஒன்றாக குடும்பம் காணப்படுகின்றது. பிள்ளைகள் தங்களுடைய ஆரம்ப கால கட்ட வளர்ச்சியிலிருந்து அவர்களின் முதிர்ச்சி மற்றும் அனுபவங்கள் சார்ந்த விடயங்களை முதன் முதலாக குடும்பத்துடன் இருந்து கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு குழந்தைகளுடைய வளர்ச்சியில் குடும்பமானது பல்வேறுபட்ட வகையிலான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.
கர்ப்ப காலத்தின் பொழுது தாயினுடைய மனநிலை, தாய் கேட்கின்ற ஒலிகள் மற்றும் தாயினுடைய ஒவ்வொரு செயற்பாடும் குழந்தையினுடைய விருத்தியிலும், வளர்ச்சியிலும் செல்வாக்கை செலுத்துவதுடன் பிறப்பிற்கு பின்னரான பிள்ளை விருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில் பிள்ளை விருத்தியை மையமாகக் கொண்டு கர்ப்பமாக இருக்கின்ற தாயொருவர் தன்னுடைய குடும்ப சூழலை தகுந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
குழந்தை வளர்ச்சி எனப்படுகின்ற பொழுது அங்கே குழந்தைகளினுடைய உளவியல் மற்றும் மனவெழுச்சி சார்ந்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் விரும்பத் தகுந்த மனவெழுச்சிகளை வெளிக்காட்டுவதிலும் பிள்ளைகளினுடைய உளவியல் தன்மை மகிழ்ச்சிகரமானதாக அமையப்பெறுவதற்கும் குடும்பத்தின் பங்களிப்பு அவசியமாக கருதப்படுகின்றது. காரணம் குழந்தை ஒன்று வளர்கின்ற குடும்பத்தினுடைய சூழலியல் காரணிகள் பிள்ளைகளுடைய மனநிலையில் செல்வாக்கு செலுத்துவதுடன் குழந்தைகள் வளர்கின்ற சூழலையும் மாற்றியமைக்கின்றன. பிள்ளைகளை இயற்கை அம்சங்கள் மற்றும் நேரான மனப்பாங்குகளை ஏற்படுத்தக்கூடிய சூழலமைவைக் கொண்ட குடும்பத்தினுள் பெற்றோர்கள் வளர விடுதல் தேவை நிறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. அத்துடன் பல தரப்பட்ட விடயங்களை குழந்தைகள் குடும்பத்தில் காணப்படுகின்ற அங்கத்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்கின்ற காரணத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களின் நடத்தை பண்புகள் குழந்தைகளினுடைய உளவியல் சார்ந்த பண்புகளிலும் தாக்கத்தை செலுத்துகின்றன. இதனுள் முக்கியமானவைகளாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணர்வுகளை அடக்கப் பழக்குதலஇ; பிள்ளைகளினுடைய அடைவுகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்குதல் என்பவற்றை செய்தல் வேண்டும்.
குழந்தைகள் சமூகமயமாதல் தன்மைக்கு பழக்கப்படுகின்ற இடமாக குடும்பம் அமையப்பெறுகின்றது. இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளை வளர்க்கின்ற பொழுது அவர்களை சமூகமயமாதல் பண்புகளுக்கு ஏற்றவாறு பெற்றோர்கள் வளர்த்தல் கட்டாயமான ஒன்றாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் பலதரப்பட்ட பெற்றோர்கள் கௌரவம் மற்றும் பாதுகாப்புக் கருதி தங்களுடைய பிள்ளைகளை ஏனையவர்களுடன் சேர விடாது தடுக்கின்றனர். இந்த நிலைமையானது குழந்தைகளை சமூகமயமாக்கல் வளர்ச்சியிலிருந்து பின் தள்ளுவதுடன் பிள்ளைகளுக்கு தேவையான விருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பிள்ளைகள் சமூகமயமாதல் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காக தலைமைத்துவ பண்புகளை வளர்த்தெடுத்தல்இ சம வயது குழுக்களுடன் பிள்ளைகளை சேர விடுதல் மற்றும் பிள்ளைகளிடத்தில் குழு விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை செய்தல் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகளிடத்தில் நல்ல நடத்தைகளுக்கு பாராட்டு வழங்குதலஇ; மீள வலியுறுத்தல் வழங்குதல் என்பவற்றை செய்யும் பொழுது சமூக நடத்தைகளுக்கு அவர்கள் நெறிப்படுத்தப்படுகின்றனர.; குழந்தைகளின் ஆரம்ப நிலை சமூகமயமாக்கல் அவர்களின் தேவைகள் மற்றும் உந்துதல்களுடன் இணைந்து காணப்படும். இதற்குரிய சந்தர்ப்பங்களை குடும்பம் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.உதாரணமாக தமக்கு உணவு வழங்குகின்ற தாயினுடைய முகத்தைப் பார்த்து குழந்தை மகிழ்ச்சி அடைகின்றது அத்துடன் தந்தையர்கள் குழந்தைகளை தூக்கி வைத்து விளையாடுகின்ற பொழுது அவர்களின் முகத்தைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர.; இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக பிள்ளைகள் சமூகமயமாக்கல் தன்மைக்கு நெறிப்படுத்தப்படுவதுடன் மகிழ்ச்சிகரமான உளவியலையும் அடையப் பெறுகின்றனர்.
குடும்பம் எனப்படுகின்ற பொழுது பலதரப்பட்ட கட்டமைப்புகள் காணப்படுகின்றன. அதாவது தனிக் குடும்பம் இ பலதரப்பட்ட உறவினர்களை இணைத்து கூட்டுக் குடும்பம் அத்துடன் தாய் தந்தையர்கள் இணைந்து இருக்காது பிரிந்த குடும்பம் போன்ற வகைப்பாடுகள் உள்ளன. இவற்றுள் ஒவ்வொரு குடும்பப் பிரிவிலும் வளர்கின்ற குழந்தைகளுக்கிடையில் அவர்களுடைய நடத்தைகள் மற்றும் விருத்தி என்பவற்றின் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன இதற்கு அடிப்படை காரணம் அந்த குழந்தை வளர்கின்ற குடும்பச் சூழல் ஆகும். அதுமட்டுமல்லாது குழந்தைகளை வளர்க்கின்ற பொழுது குடும்பங்களுக்கிடையில் பலதரப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் செயற்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவை பிள்ளைகளுடைய வளர்ச்சி சார்ந்து காணப்படுவதுடன் சில செயற்பாடுகள் பிள்ளைகளுடைய விருத்திக்கு தகாத முறைமையிலும் காணப்படுகின்றன. உதாரணமாக குழந்தைகள் 2 வயது தொடக்கம் 5 வயது வரை தங்களுடைய பால் உறுப்பை கையாள்வதன் மூலமாகவும் ஆடைகள் இன்றி திரிதல் மூலமாகவும் பாலியல் இன்பத்தை அடைய பெறுகின்றனர். குறிப்பிட்ட இந்த வயதில் குழந்தைகள் காட்டுகின்ற நடத்தையை விரும்பாத பெற்றோர்கள் நடத்தைகளுக்கு தடை விதிக்கின்ற பொழுது குழந்தைகளுடைய பாலியல் இன்பம் கட்டுப்படுத்தப்பட்டு பிற்பட்ட காலங்களில் அவ் பிள்ளைகளின் நடத்தைகள் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக அமைகின்றன. இவ்வாறான விடயங்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளை பராமரிக்கின்ற பொழுது கவனத்தில் எடுக்க எடுத்துக்கொள்ள வேண்டியவைகளாக உள்ளன.
குழந்தைகளின் வளர்ச்சி எனப்படுகின்ற பொழுது மொழி என்பது கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் பொதுவாக குழந்தைகள் பிறந்து 18 மாதத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை இணைத்து அதிகமாக கற்றுக் கொள்கின்றனர் அத்துடன் ஒரு வயதாக இருக்கும் பொழுது ஒரு சொல் மொழியை பேச தொடங்குகின்றதோடு குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகின்ற பொழுது 50 சொற்கள் வரை அறிந்திருக்கின்றனர். இவ்வாறு குழந்தைகளுடைய ஆரம்ப மொழி வளர்ச்சியானது குடும்பத்திலிருந்து கிடைக்கப் பெறுகின்ற காரணத்தினால் பிள்ளைகளுடைய மொழி வளர்ச்சிக்கு தேவையான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு குடும்பத்தவர்களிடம் காணப்படுகின்றது.
குழந்தைகளிடத்தில் முயன்று தவறுதல் செயற்பாடுகளுக்கு குடும்ப அங்கத்தவர்கள் இடமளித்தல் வேண்டும். காரணம் பிள்ளைகளுடைய தசை நார் இயக்கச் செயற்பாடுடன் கூடிய உடலியக்க வளர்ச்சி மற்றும் புலனங்கங்களின் வளர்ச்சிகள் குழந்தைகளின் பல்வேறுப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே இடம்பெறுகின்றன. பொதுவாக புலனியக்க பருவம் எனப்படுகின்ற பொழுது பிறப்பிலிருந்து இரண்டு வயது வரை நிகழும் எளிமையான புலனங்கங்கள் சார்ந்த செயற்பாடுகளோடுமஇ; உடல் இயக்க செயற்பாடுகளோடும் இணைந்த வகையில் குழந்தைகளின் உணர்ச்சி ஏற்பாடுகள் வளர்ச்சி அடைகின்றன. உதாரணமாக ஒளிஇ வெளிச்சம் ஆகிய தூண்டிகளின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல் இ மகிழ்ச்சியான அனுபவங்களை தொடர்ந்து பராமரித்துக் கொள்வதற்கு குழந்தைகள் விரும்புதல் போன்ற செயற்பாடுகள் புலனங்கங்கள் மற்றும் உடலியக்க திறன் சார்ந்த வளர்ச்சியோடு மகிழ்ச்சிகரமான உளவியல் தன்மையை பேணுவதற்கான செயற்பாடுகள் ஆகும். இவ்வாறானவற்றை கருத்தில் கொண்டு இவற்றிட்;கு இடமளிக்கக் கூடிய வகையில் குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகள் காணப்படுதல் வேண்டும்.
பிறப்பிலிருந்து வெளியகச் சூழலான பாடசாலைக்கு பிள்ளைகள் செல்லும் வரை பல்வேறுபட்ட விடயங்களை குடும்பத்தில் இருந்து கற்றுக் கொள்கின்ற காரணத்தினால் குழந்தைகள் வளர்கின்ற குடும்ப சூழலில் உள்ளவர்கள் பிள்ளைகளுடைய வளர்ச்சி மற்றும் விருத்தியை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையிலான நடத்தைகளை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் குழந்தைகளுடைய அனுபவங்களை மேம்படுத்தக்கூடிய வகையிலான மனப்பாங்குகளை கொண்டவர்களாகவும் காணப்படுகின்ற பொழுது குழந்தைகளுடைய விருத்தி மற்றும் வளர்ச்சியானது சிறப்பானதாக அமையப்பெறுவதுடன் உளவியல் தன்மை மற்றும் நடத்தைகள் என்பவற்றிலும் விரும்பத்தகுந்த பிரதிபலிப்பினை எடுத்துக்காட்டுவதாக அமையப்பெறும்.
இளங்கீரன் தனுஜன்
ஆசிரிய மாணவன்
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
இலங்கை
Post a Comment