அன்பின் இளைஞரே
கேளீர்
இதுவரை நீர் பொறுத்ததெல்லாம்
போதும்
இனி ஒரு விதி செய்வோம் வாரீர்
மது என்னும் தீயவனை தீண்டாமல்
இருப்போமே
ஆண்டாண்டு காலமாய் இதே போதனை பலர் சொல்லிக் கேட்டிருப்போம்
ஆனாலும் என்ன பயன்
மதுப் பிரியர்கள், அதைப் பிரிய
மறுக்கின்றீர்கள்
இதனால் தான்
இளைஞர் நெறி பிறழ்வு
துரித வீதி விபத்து
விவாகரத்து
சமூக சீரழிவு
ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்?
எப்படியாயினும் இளையோர்
நாமே சிந்திக்க வேண்டும்
மது அரக்கனை வேரோடு அழிக்க வேண்டும்,
இதுவரை நேர்ந்த இழப்புக்களை ஈடு செய்யவெனினும்
கல்வியை ஆயுதமாய்க் கொண்டு
இனி ஒரு விதி செய்வோம் வாரீர்
இதுவரை பொறுத்ததெல்லாம் போதும்!!!
க.நிவேதா
நான்காம் வருட சிறப்பு கற்கை நெறி மாணவி
கிழக்கு பல்கலைக்கழகம்.
Post a Comment