சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் மரநடுகை செயற்றிட்டம் முன்னெடுப்பு OMI- CPR (JPIC)

 


தூய்மையான இலங்கை ( Clean Sri Lanka) என்ற தேசிய திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இயற்கையை இன்னும் விருத்தி செய்து பேணிப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு பக்குவமாக வழங்க முயற்சிக்கும் செயற்பாடாகவும் மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணக் கருவான "பூமி எமது பொது இல்லம்" என்பதை முன்னிறுத்தியும் வலியுறுத்தியும் இயற்கையின் ஒருங்கிணைப்பை முதன்மைப் படுத்தியும் "இயற்கை நட்புறவு சமூக உருவாக்கத்தை நோக்கி" என்னும் கருப்பொருளில் அமலமரித்தியாகிகளின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினாலே சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்திலே பல நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு வருகின்றது.



 அதனடிப்படையில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலைகள் கடற்கரை மற்றும் பொது இடங்களில் மரங்களை நாட்டியும் மற்றும் பொது இடங்களில் துப்புரவு பணிகள் மூலம் செம்மை செய்தும் வருகின்றது









0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post