மன்னார் மாவட்டத்தின் அந்தோணியார்புரம் கிராமத்தில் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர் அருட்தந்தை S.J.ஜீவரட்ணம் அமதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்தோனியார்புரம் பங்குத்தந்தை அருட்பணி .அமலதாஸ் அமதி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்..
அருட்சகோதரி மரிஸ்ரெலா மற்றும் CPR பெண்கள் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆரிவேர்க் பயிற்சி நெறியினை நிறைவு செய்த பயிலுனர்களின் ஆரிவேர்க் வேலைப்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.




















Post a Comment