உலக சுகாதார தினம் இன்று

 உலக சுகாதார நாள் (World Health Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் திகதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய நாளாகும். இந்த நாளை உலக சுகாதார அமைப்பு (WHO) 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவாக, 1950ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.



உலக சுகாதார நாளின் நோக்கம்

உலக மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் வழங்கல், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல்,சமூக ஆரோக்கிய சவால்கள் மீது கவனம் செலுத்தல் என்பனவாகும்.


உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவிப்பின்படி, 2025ஆம் ஆண்டின் உலக சுகாதார நாள்  "ஆரோக்கிய தொடக்கங்கள், நம்பிக்கையான எதிர்காலங்கள்" (Healthy beginnings, hopeful futures) என்ற கருப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும்  தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலம், தாய்மார்களின் நீண்ட கால நலனையும், குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்ய அரசுகள் மற்றும் சுகாதார சமூகங்களை ஊக்குவிக்கிறது. ​



சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகமும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் தனிநபர் சுகாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், முதியோர்களின் போசாக்கு மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறுபட்ட செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதேபோன்று இளையோர்களை விளையாட்டு நடவடிக்கைகளில் ஊக்கிவிப்பதனூடாக அவர்களின் மனம், உடல் ரீதியான மற்றும் சமூகரீதியான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post