இயற்கை என்பது மனிதனின் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாகவும், வாழ்க்கையின் அடித்தளமாகவும் விளங்கும் ஒரு பரந்த பரிவைக் கொண்ட அமைப்பாகும். மனிதன் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை இயற்கையின் அணைத்து கூறுகளையும் நாடிக்கொண்டு தான் வாழ்கிறான். மழை, காற்று, வெயில், நிலம், கடல், மலைகள், வனங்கள், விலங்குகள், பறவைகள், நீர்நிலைகள் என அனைத்தும் இயற்கையின் பகுதிகளாகும்.
இயற்கையின் தன்மை
இயற்கை என்பது தன்னிச்சையான அமைப்பாகும். அதாவது, மனிதனால் கட்டுப்படுத்தப்படாதது. மழை, வெப்பநிலை, பருவமழை, பூமியின் சுற்றி வருதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் சுய இயக்கம் அடிப்படையிலானவையே. இதன் இயல்பு அமைதி, ஒழுங்கு, வளம் என்பவையாகும். இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு. பூமியில் நிகழும் ஒவ்வொரு இயற்கை செயல்பாடும் ஒருவருக்கொருவர் இணைந்துள்ளன.
மனிதனும் இயற்கையும்
மனிதனும் இயற்கையும் ஆழமான தொடர்புடையவை. பழங்கால மனிதர்கள் இயற்கையையே தெய்வமாக கருதினார்கள். வனங்களில் வாழ்ந்த போது, விலங்குகளோடு போராடி, தண்ணீருக்காக ஆறுகளையும், உணவுக்காக காடுகளையும் நாடினர். காலப்போக்கில், தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் இயற்கையினைக் கட்டுப்படுத்த முயல்ந்தான். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இயற்கையை எதிர்க்கும் முயற்சி பல நேரங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் காட்டுகின்றன.
இயற்கையின் அழகு
இயற்கையின் அழகு சொல்லிமுடியாதது. பூக்கள் மலரும் தோட்டங்கள், பசுமையான மலைகள், நீலமான கடல், பனிமூடிய குன்றுகள், பறவைகளின் கீதம், இரவின் அமைதி, காலை சூரியோதயம் என ஒவ்வொன்றும் தனித்துவமான அழகை கொண்டவை. இவ்வளவுக்கும் மேலாக, இயற்கை நமக்கு உணர்ச்சி நலனையும் தருகிறது. அமைதியான சூழ்நிலையில் நேரம் செலவிடுவது மனஅமைதிக்குத் தூண்டியாக அமைகிறது. கவிஞர்களும், எழுத்தாளர்களும், இசைஞர்களும் இயற்கையை அவர்களது படைப்புகளுக்குப் பிரேரணையாக கொண்டுள்ளனர்.
இயற்கையின் பராமரிப்பு அவசியம்
இயற்கையை பாதுகாப்பது நம்முடைய கடமை. வளர்ந்துவரும் தொழில்நுட்பம், பெருகும் மக்கள்தொகை, நுகர்வாதக் கலாச்சாரம் ஆகியவை இயற்கையின் நிலைமையை பாதித்துள்ளன. மரங்கள் அழிக்கப்படுகின்றன, காடுகள் சுரண்டப்படுகின்றன, விலங்குகள் அழிவதற்கான நிலையினில் உள்ளன. இதற்கெல்லாம் காரணம் நம் அதிகப்படியான தேவைகள் மற்றும் பொறுப்பற்ற செயல்கள்.
இயற்கையின் சமநிலையை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. மரங்களை நடுவோம், நீர்நிலைகளை பாதுகாப்போம், கழிவுகளை சரியாக கையாளுவோம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தேர்ந்தெடுப்போம் என்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பள்ளிகளிலும், சமூகத்திலும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகள்
இயற்கை தன்னிச்சையானது என்றாலும், சில நேரங்களில் அது பேரழிவுகளை உருவாக்குகிறது. நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளம், பண்டிமழை, வறட்சி போன்றவை மனித வாழ்வை தாக்குகின்றன. இதனை நாம் இயற்கையின் கோபமாக எண்ணலாம். ஆனால் பெரும்பாலும் இவை நம்முடைய தவறான நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் எதிர்வினையாகும். காடுகளை அழிப்பது மழை இல்லாமையை ஏற்படுத்துகிறது. ஆறுகளை மறிப்பது வெள்ளத்தை உண்டாக்குகிறது. எனவே, இயற்கையை மதிப்பதும், பாதுகாப்பதும் அவசியமாகின்றன.
இயற்கையின் பங்கு – சுகாதாரத்தில்
இயற்கை நமக்கு சுவாசிக்க தூய காற்றை, குடிக்கத் தூய நீரை, சாப்பிட நல்ல உணவுகளை வழங்குகிறது. மரங்களில் இருந்து பெறப்படும் மூலிகைகள் பல்வேறு நோய்களை குணமாக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் நமது உடல்நலத்தை பாதுகாக்கின்றன. அவை எந்தவொரு ரசாயனப் பக்கவிளைவுகளும் இல்லாதவை. இது தான் இன்று இயற்கை விவசாயம், இயற்கை உணவுகள் என்ற இயக்கங்களை மனிதர்கள் விரும்ப காரணமாகிறது.
இயற்கை என்பது நமக்கு கடவுளால் வழங்கப்பட்ட மிகச் சிறந்த பரிசாகும். அதை நாம் பயன்படுத்துவதோடு பாதுகாப்பதும் நம் கடமையாகும். நம் எதிர்கால சந்ததிகளுக்கு சுத்தமான சுற்றுச்சூழல், தூய வானிலையை வழங்க விரும்புகிறோமெனில், இன்று நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். தாய் போல் நம்மை பாதுகாக்கும் இயற்கையை மதிப்போம், காப்போம்.
#அ.அன்ரோசியன்
#நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர்
#சமாதானத்திற்கும்நல்லிணக்கத்திற்குமான_பணியகம்
Post a Comment